சினிமா

சீரியல் வரலாற்றிலேயே முதன்முறை.! பாண்டியன் ஸ்டோருக்கு கிடைத்த பெருமை! சித்ரா இருந்தா எவ்ளோ சந்தோசப்பட்டுருப்பாங்க!!

Summary:

பாண்டியன் ஸ்டோர் தொடர் ரசிகர்களிடையே பெற்ற மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, அதனை இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குடும்ப  தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் சுஜிதா, ஸ்டாலின், குமரன், வெங்கட்,ஹேமா என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்ட ஜோடி கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக குமரனும், முல்லையாக விஜே சித்ராவும் நடித்தனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்துவந்த காவ்யா நடித்து வருகிறார். 

இந்த தொடர் ரசிகர்களிடையே பெற்ற மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இத்தொடரை இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில்  ரீமேக் செய்துள்ளனர். பொதுவாக இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலிருந்து பிரபலமான பல சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் சீரியல் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இதனால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் ரசிகர்கள் சித்ரா இருந்தா எவ்ளோ சந்தோசப்பட்டுருப்பாங்க என வருத்தமடைந்துள்ளனர்.
 


Advertisement