அட.. பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய முல்லையா இது! செம மாடர்னாக சும்மா கிறங்கடிக்குறாரே!

அட.. பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய முல்லையா இது! செம மாடர்னாக சும்மா கிறங்கடிக்குறாரே!


pandiyan-store-kavya-modern-photos-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் ,தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. அவர் கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் பாரதி  கண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்த காவியா நடித்து வருகிறார். இவரை தற்போதுதான் ரசிகர்கள் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் காவியா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் காவியா தற்போது செம மாடர்னாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.