
Pandiyan store
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் அதிகப்பட்ச வரவேற்பை பெற்று வரும் அழகிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு அழகான கூட்டு குடும்பத்தின் பெருமையை எடுத்து கூறும் தொடராக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சமீபத்தில் தான் இந்த தொடர் 300 நாட்கள் கடந்ததை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர் அழகிய ஜோடிகளான கதிர் மற்றும் முல்லைக்கு இடையே பெரிய பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கதிர் - முல்லை ஜோடிகள் வீடியோவின் மூலம் விளக்கமளித்துள்ளனர். அதில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கூறியுள்ளனர்.
மேலும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு பெரிய பிரச்சனை ஒன்று கிடையாது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம் என கூறியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Advertisement
Advertisement