புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையோட தங்கச்சி இவர்தானா! வாவ்.. செம்ம அழகா இருக்காரே!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். குடும்பக் கதையை மையமாகக் கொண்டு, அண்ணன், தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் பெருமளவில் கவர்ந்தவர் சித்ரா. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இந்நிலையில் தற்போது அவருக்கு பாண்டியன் ஸ்டோர் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது காவ்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் செம்ம அழகு என புகழ்ந்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.