என்னது முதன் முறையாக சினிமா விழாவில் கலந்து கொள்கிறாரா முதலமைச்சர்! எந்த படத்தின் விழாவிற்கு தெரியுமா?

என்னது முதன் முறையாக சினிமா விழாவில் கலந்து கொள்கிறாரா முதலமைச்சர்! எந்த படத்தின் விழாவிற்கு தெரியுமா?


Palanisamy

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக சினிமா பிரபலங்கள் தான் தமிழகத்தை ஆண்டு வந்துள்ளனர். அதனால் சினிமாவும், அரசியலும் ஒன்றாகவே பிரிக்கமுடியாத அளவுக்கு இருந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சினிமாவும், அரசியலும் வேறு திசையில் பயணிக்க ஆரம்பி விட்டன. அதுமட்டுமின்றி தற்போது வரும் சினிமா பிரபலங்கள் தனி தனி கட்சியை ஆரம்பி வருகின்றனர்.

Palani samy

இந்நிலையில் எந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதன் முதலாக சினிமா விழா ஒன்றில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த வருடம் வெளியாகி மெகா ஹிட் அடித்த படங்களான எல்கேஜி, கோமாளி படத்தின் வெற்றியை அப்படங்களின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சென்னையில் நடத்தவுள்ளார். அதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.