தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
விளைவுகளை சந்திக்க நீங்க தயாரா? ஆண்களுக்கு எச்சரிக்கை விடும் ஓவியா.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றாலும் ரசிகர்களின் இதயத்தில் வெற்றி பெற்றவர் ஓவியா.
இவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீசாக உள்ளது.
மேலும் அதைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாகவும், பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.
— Oviyaa (@OviyaaSweetz) 23 October 2018
அதில், பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.
அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.
நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்” என்பதை பகிர்ந்துள்ளார்.