பத்திரிக்கையாளர் கேட்ட ஒரு கேள்வி கோபத்தில் நடிகை ஓவியா பதிவிட்ட பரபரப்பு ட்வீட்!Oviya

தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அனைத்தும் இவரை பிரபலமடைய செய்யாமல் தோல்வியை தழுவியது.

அதன் பிறகு நீண்ட இடைவெளியில் இருந்த ஓவியாவுக்கு பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட உண்மை, நேர்மை போன்ற குணங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பிரபலமானார்.

அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான 90 எம்எல் படம் இவரை சர்ச்சையில் சிக்க வைத்தது.

oviya

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் அவரிடம் ரஜினி, கமல் அரசியல் குறித்து உங்களின் கருத்து என்ன என்று கேள்வி கேட்டுள்ளனர். அதில் கோபமான ஓவியா எந்த பதிலும் அளிக்கவில்லை.

அதனை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பற்ற நடிகர், நடிகைகளிடம் அரசியல் கேள்வி கேட்பதை பத்திரிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் இதை பற்றி பொது மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கோபமாக ட்வீட் செய்துள்ளார்.