ஓ மை கடவுளே..! நடிகை வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்..! காவல் நிலையத்தில் புகார்.!Oh my kdavule mobile number scene issue

அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடிப்பில் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது ஓ மை கடவுளே திரைப்படம். இந்நிலையில் ஓ மை கடவுளே திரைப்படத்தால் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் கூறியுள்ள புகாரில், ஓ மை கடவுளே படத்தின் நாயகி வாணி போஜனை கேட்டு தனக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருவதாகவும், தான் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி வருவதாகவும், ஓ மை கடவுளே படத்தில் தனது எண்ணை வாணி போஜனின் எண் என கூறுவது போன்ற காட்சி உள்ளது.

vani bojan

இதனால், எனது எண்ணை வாணி போஜனின் எண் என நினைத்து ரசிகர்கள் தினம் கால் செய்து தொந்தரவு செய்வதாகவும், தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்திய படக்குழு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பூபாலன் என்ற அந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் புகாரில் தெரிவித்துள்ளார்.