உடல் எடை குறைந்து மீண்டும் ஒல்லியாக மாறிய நித்யா மேனன்! புகைப்படம்!



Nithya menon new slim look photo goes viral

கேரளாவை சேர்ந்த நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை நித்தியா மேனன்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.

Nithya menon

இந்நிலையில் சில மாதங்களாக உடல் எடை கூடி மிக குண்டாக மாறினார் நித்யா மேனன். இதனால் செகண்ட் அல்லது மூன்றாவது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்ததாம். கதாநாயகியாக நடிக்க இவரை யாரும் அணுகவில்லை என்ற ஒரு பேச்சு தமிழ் சினிமாவில் அடிபட்டது.

இதனால் அதிரடி முடிவெடுத்த நித்யா மேனன் உடல் எடை குறைக்கும் வேளையில் இறங்கினார். தற்போது உடல் எடை குறைந்து மீண்டும் பழைய நித்யா மேனனாக, ஸ்லிம்மான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.