சினிமா

அட.. நடிகை நித்யா மேனனா இது! அடையாளமே தெரியாம எப்படி மாறிட்டார்.. படுக்கையில் நடத்திய வேற லெவல் போட்டோஷூட்!

Summary:

நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். பப்லியான தோற்றத்தில் இருக்கும் அவர் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் நடிகர் விஜய்யின்  மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2 மற்றும் சைக்கோ திரைப்படங்களில் இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார். மேலும் அவர் புதுமுக இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி  ஐயன் லேடி படத்திலும் நடித்துள்ளார்

இந்நிலையில் உடல் எடை கூடி மிகவும் குண்டாக காணப்பட்ட அவர் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்ட நிலையில் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை நித்யா மேனனா இது! இப்படி இளைச்சுட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement