ப்ளீஸ்.. இதை செய்யுங்க.! நடிகை நித்யா மேனனுக்கு திருமணமா.! அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

ப்ளீஸ்.. இதை செய்யுங்க.! நடிகை நித்யா மேனனுக்கு திருமணமா.! அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


nithya-menan-denies-marriage-rumours

தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். பார்ப்பதற்க்கு கொழுகொழுவென செம பப்லியாக இருக்கும் நடிகை நித்யாமேனன் விஜய்யுடன் மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2, துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி மற்றும் சைக்கோ போன்ற படங்களில் மிகவும் எதார்த்தமான  தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

நடிகை நித்யா மேனன்  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது மலையாளத்தில் 19 (1)(a) என்னும் படத்திலும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மைக்காலமாக நடிகை நித்யா மேனனுக்கு மலையாள டாப் ஹீரோ ஒருவருடன் திருமணம் என தகவல்கல் பரவி வந்தது.

Nithya menon

இந்த நிலையில் அந்த தகவலை நடிகை நித்யா மேனன் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் அவர்  சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளில் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க முயற்சி செய்ய வேண்டும் என  நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.