என்னது.. இவருமா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா இந்த முக்கிய பிரபலம்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

என்னது.. இவருமா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா இந்த முக்கிய பிரபலம்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!


news-viral-as-kavya-releaving-from-pandiyan-stores-seri

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை பெருமளவில் கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடன் ஹிட்டாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இத்தொடர் அண்ணன் தம்பிகள் பாசம், கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் தற்போது கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறி புதிய ஹோட்டல் தொழிலை தொடங்கியுள்ளனர். இவ்வாறு சுவாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. துவக்கத்தில் விஜே சித்ரா முல்லையாக நடித்து வந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து காவ்யா முல்லையாக நடித்து வந்தார்.

pandian stores

தற்போதுதான் அவர் மக்களிடையே  ரீச்சானார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மிஸ் யூ ஆல் என பதிவு  செய்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.