
New name for bigg boss lashliya
பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வனிதா வெளியேறியதை அடுத்து தற்போது 7 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். தற்போது உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடிவருவதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் போட்டியாளர்களை சந்திக்க வந்திருந்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு குறித்து பேசிய கமல் மேலும் யாரவது வந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என நினைக்கிறீர்களா என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் தங்கை மற்றும் மாமியார் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என காமெடியாக கூறினார். இதனை அடுத்து இன்றைய நிகழ்ச்சியில் அவர்களை மேடைக்கு அழைத்து பேசவைத்தார் கமல். சாண்டி மாஸ்டரின் மனைவியின் தங்கை போட்டியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில் வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் தாம் ஒரு பட்ட பெயர் வைத்திருப்பதாக கூறினார். தனக்கு தவளை என பட்ட பெயர் இருப்பதாகவும், லாஷ்லியா பார்ப்பதற்கு தன்னை போலவே இருப்பதால் அந்த பெயர் அவருக்குத்தான் என கூறி லாஷ்லியாவுக்கு தவளை என பெயர் வைத்தார்.
Advertisement
Advertisement