தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா? உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறையை சார்ந்த பலரும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளித்தது.
இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய் கிழமை திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. வி.பி.எப் கட்டண பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, கொரோனா நெருக்கடி காரணமாக சினிமாத்துறை மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கும் நிலையில், சினிமாவை சார்ந்த பல தொழில்களும் முடக்கியுள்ளது, இதனை மீட்பதற்காக கியூப் சினிமா, டிஜிட்டல் சினிமா உருவாக்கத்திற்காக பணிகளை செய்துத்தரும் கியூப் நிறுவனம் தற்போது வி.பி.எப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதற்கும் பொருந்தும் என அந்த நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை திரையரங்கில் பார்வையாளர்களுடன் கொண்டாடுவதற்கு அனைவருக்கும் வாழ்த்துகள்” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் உச்சகட்ட குஷியில் உள்ளனர்.