நொடிக்கு நொடிக்கு திகில்! முக்கியமான நாளில் வெளியாகி இணையத்தையே மிரட்டும் நயன்தாராவின் நெற்றிக்கண் டீசர் இதோ!



netrikan-movie-teaser-released

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகி இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நெற்றிக்கண். திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிண்ட் ராஜ் இயக்குகிறார்.

க்ரிஷ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு நயன்தாராவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் திரில்லர் நிறைந்த மிரட்டலான இந்த டீசர் வைரலாகி இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறது.