நடிகை நயன்தாரா வெளியிட்ட ஒத்த புகைப்படம்.! தாறுமாறாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

நடிகை நயன்தாரா வெளியிட்ட ஒத்த புகைப்படம்.! தாறுமாறாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!


netisans teased nayanthara photo

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

nayanthara

இந்நிலையில் அவர் சமீபத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து, தனது தனி திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் அதிகமான பட்ஜெட் படங்களில் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என பல மொழி  படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து வரும் நிலையில் அவர்களுக்கு விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சற்று வயதானவர் போல இருக்கும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆண்டி எனவும் கிழவி எனவும் கமெண்ட் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.