சினிமா

நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலில் பிரச்சனையா! நயன்தாராவின் செயலால் சந்தேகமான ரசிகர்கள்!

Summary:

Nayanthara Vignesh sivan

தனியார் விருது விழாவிற்கு தனியாக வந்த நயன்தாரா. மேலும் மேடையில் விக்னேஷ் சிவன் பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சந்தேகமடைகின்றனர்.

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அதுமட்டுமின்றி இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. 

மேலும் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் சுற்றி வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு விருது விழாவிற்கு நயன்தாரா தனியாக வந்துள்ளார். அதுமட்டுமின்றி மேடையில் விக்னேஷ் சிவன் பற்றிய கேள்விக்கு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

மேலும் அவரிடம் ஆன்மீக பயணம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மன அமைதிக்காக சென்றதாக கூறியுள்ளார். இதனை வைத்து ரசிகர்கள் இருவரின் காதலில் பிரச்சனை ஏற்ப்பட்டு விட்டதாக கிசுகிசுத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நயன்தாரா வாங்கிய இரண்டு விருத்திற்கும் விக்னேஷ் சிவன் வாழ்த்து எதுவும் கூறாதது இன்னும் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். 


Advertisement