சினிமா

நயன்தாரா வீட்டில் விசேஷம்! காதலருடன் கோலாகலமாக கொண்டாடிய லேடி சூப்பர்ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

 தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இண

 தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. அவரது கைவசம் தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் உள்ளன. 

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பல வருடங்களாக காதலித்து வரும் இருவரும் வெளிநாடு செல்வது, தனி ஜெட்டில் பயணிப்பது என பிசியாக உள்ளனர். மேலும் அந்த புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் .

இந்நிலையில் நேற்று நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இத்தகைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் தனது மாமியாருக்கு மனதார பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement