சினிமா

வச்ச கண்ணு வாங்காமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Summary:

Nayanthara latest photos

இன்று தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு சர்ச்சைகளை கடந்து இன்று தமிழ் சினிமாவின் நாயகியாக புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

தனி ஒரு நடிகையாக இவர் நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெறுகிறது. சமீபத்தில் தளபதியுடன் இவர் நடித்த பிகில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்துவருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. சேலை, நகை அணிந்து ஓவியம் போல் மாறியிருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தை வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசித்துவருகின்றனர் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படம்.


Advertisement