அடேங்கப்பா.. அடுத்தடுத்ததாக எத்தனை படங்களில் நடிக்கவுள்ளார் பார்த்தீங்களா! செம பிசியான லேடி சூப்பர் ஸ்டார்!!
அடேங்கப்பா.. அடுத்தடுத்ததாக எத்தனை படங்களில் நடிக்கவுள்ளார் பார்த்தீங்களா! செம பிசியான லேடி சூப்பர் ஸ்டார்!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்து செம மாஸ் கொடுத்துள்ளார். மேலும் நடிகை நயன்தாராவிற்கென ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை நயன்தாரா கைவசம் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, நெற்றிக்கண் போன்ற திரைப்படங்கள் உள்ளன. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நயன்தாராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அதாவது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரு படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளாராம். அதில் ஒரு படத்தை வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கவுள்ளதாகவும், மற்றொரு படத்தை ’எலி’ இயக்குனர் யுவராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ரெட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உருவாகவிருக்கும் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.