சினிமா

காதலர் விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய நயன்தாரா! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

Summary:

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நயன்தாரா நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனைத்  தொடர்ந்து என்றும் இளமையாக இருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரது பிறந்த நாளன்று நெற்றிக்கண் பட டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். முழு அலங்காரம், கேக் மற்றும் கிப்டுகளுக்கு மத்தியில் நயன்தாரா நிற்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் பெருமளவில்  வைரலாகி வருகிறது.


Advertisement