திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு! செம உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்!!
திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு! செம உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்!!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள புற்றுக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. அவரது கைவசம் தற்போது அண்ணாத்த, காற்று வாக்கில் இரண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப்படத்தில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
😇😇😇 happy & proud be associated !!! Release date very very soon 😇😇😇😇 https://t.co/o7H4bKn6gu
— Vignesh Shivan (@VigneshShivN) July 21, 2021
இந்த நிலையில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் அனைத்தும் முடிவடைந்து நெற்றிக்கண் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தநிலையில் விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் நயன்தாரா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.