ராதா வேண்டாம் ரவி மட்டும் போதுமே; ராதாரவிக்கு பிரபல தமிழ் நடிகரின் கண்டனம்.!
நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நயன்தாரா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"நயன்தாரா நல்ல நடிகை. அவரை பற்றி வராத செய்தியே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. என்று நயன்தாராவை தாக்கி இரட்டை அர்த்தமுடைய கருத்துக்கள் பலவற்றை தெரிவித்தார்.
இவ்வாறு விழாவில், நடிகர் ராதாரவி பேசியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இந்த சர்ச்சை கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால், “அன்புள்ள ராதாரவி சார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் உங்களுக்கு எதிரான கண்டன கடிதத்தில் கையெழுத்திடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அண்மையில் நீங்கள் நடிகைகள்,பெண்கள் தொடர்பாக வெளிப்படுத்திய பேச்சு முட்டாள்தனமானது. நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். கொஞ்சம் வளருங்கள் சார். இனிமேல் நீங்கள் உங்களை ரவி என்று மட்டும் அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.