சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் முதல் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!

Summary:

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் முதல் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாகி கலகலப்பாகவும், மோதலுடனும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக திருநங்கையான நமீதா போட்டியாளராக கலந்து கொண்டார்.

அவர் பிக்பாஸ் கொடுத்த கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க்கில் திருநங்கையான தான் குடும்பத்திலும், சமூகத்திலும் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் போன்றவற்றை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் திடீரென நமீதா ஒரு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது நமீதா மாரிமுத்துவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் சாலையோரம் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு துணிகளை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

 


Advertisement