18 வருஷம்.. ஏன் எனக்கு தகுதியில்லையா? கொந்தளித்த நடிகை நக்மா!!ஏன் என்ன நடந்தது??

18 வருஷம்.. ஏன் எனக்கு தகுதியில்லையா? கொந்தளித்த நடிகை நக்மா!!ஏன் என்ன நடந்தது??


nagma-angrily-tweet-about-congress-party

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான தேர்தல்  வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

மேலும் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்களின் பட்டியலும் நேற்று வெளியிடபட்டது. அதில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரான் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்த நடிகை நக்மா இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2003/04ல் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்பொழுது தலைவராக இருந்த சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளித்தார்.

தற்போது 18 வருடங்கள் ஆகிவிட்டது.  இன்னும் ஒரு வாய்ப்பை கூட அவர் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், மஹாராஷ்டிரா மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடமளிக்கப்படுகிறது. நான் என்ன குறைவான தகுதியுடையவளா? எனக் கேட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.