தமிழகம் சினிமா Covid-19

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா உறுதி.! அவர் பொதுமக்களுக்கு கூறும் எச்சரிக்கை.!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள்

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இந்தநிலையில் நடிகை நக்மாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மா இருப்பினும் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் அவரது ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement