சினிமா

கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நாகினி நாயகி.! வைரலாகும் வீடியோவால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்!!

Summary:

nagini mounirai dance video

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசித்து தவறாமல் பார்க்க வைத்த தொடர் நாகினி. ஹிந்தியில் வெற்றிநடைபோட்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாகினிக்கு  தமிழிலும் ரசிகர்கள் ஏராளம்.

இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் மௌனி ராய். இவர் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருப்பவர். மேலும்  தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் மௌனிராய் தற்பொழுது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார். மேலும் அவர் அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது 'RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

nagini mouni roy க்கான பட முடிவு

இதற்கிடையில் அவர் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பட்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகர்ஜூனா போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் ப்ரிமஹஸ்த்ரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இவ்வாறு தற்போது பாலிவுட்டில்ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகளை பெற்று பிஸியாக இருக்கும் மௌனி ராய் அவ்வோப்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் காளர்த்துக்கொண்டு வருகிறார்.

இவ்வாறு  சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மௌனி ராய், மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


 


Advertisement