தமிழகம் சினிமா

நேர்கொண்ட பார்வை: வெளியானது தல அஜித்தின் நியூ லுக்; ரசிகர்கள் உற்சாகம்.!

Summary:

naar konda paarvai - thala ajith new look release - fans happy

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.
 
மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே  மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை'   தல 59 படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

அந்த போஸ்டரில் தாடி, மீசையுடன் இருந்த தல அஜித் தற்போது தாடி மீசை இல்லாமல் புதிய தோற்றத்தில் உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படங்கள் தற்சமயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளார்கள்.


Advertisement