விஜய், அஜித் கூட இதை செய்ய மாட்டார்கள், ரஜினி தான் அந்த விஷயத்தில் கிரேட்" நெகிழ்ச்சியில் தேவா.!Music director deva proudly talk about rajinikandh

தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், இசையமைப்பாளர் தேவா. ரஜினியின் பெரும்பாலான படங்களின் டைட்டில் கார்டில் ஒலிக்கும் இசை, தேவா இசையமைத்த பாட்ஷா படத்தின் பி ஜி எம் தான். 

rajini

அது மட்டுமல்லாமல், அஜித், விஜய், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார். குறிப்பாக, அஜித் , விஜயின் ஆரம்பகால வெற்றிக்கு இவர் இசையமைத்த பாடல்கள் தான் மிகவும் உறுதுணையாக இருந்தன.

இப்படி விஜய் மற்றும் அஜித் படங்களில் பல மறக்க முடியாத ஹிட் பாடல்களை தேவா கொடுத்திருந்தாலும், ஒரு முறை கூட விஜயும் அஜித்தும் இவரை, பாடல் நன்றாக வந்துள்ளது என்று பாராட்டியதில்லையாம்.

rajini

"அஜித்தும், விஜயும் ரெக்கார்டிங்கும் வரமாட்டார்கள். கமல் எப்போதும் காம்போசிங்கில் தான் இருப்பார். சத்யராஜ் எப்போதாவது அழைத்து பாராட்டுவார். ஆனால் ரஜினி தான் உடனே அழைத்துப் பாராட்டுவார்" என்று கூறினார்.