எல்லோரையும் சிரிக்கவைத்த Mr.Bean இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? வீடியோ!



Mr bean latest video goes viral

எந்த ஒரு சினிமாவை எடுத்துக்கொண்டாலும் அதில் நகைச்சுவைக்கு மிக முக்கிய பங்கு தரப்பட்டிருக்கும். தமிழ் சினிமா மட்டும் இல்லாது உலக அளவில் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு என்று பெரிய இடம் உள்ளது. அந்த வகையில் உலக அளவில் நகைச்சுவைக்கு பெயர் போன கதாபாத்திரங்களில் எப்போதும் Mr.Beanக்கும் ஒரு மிகப்பெரிய இடம் உண்டு.

Mr.Bean கதாபாத்திரத்தில் நடித்தவர் உண்மையான பெயர் ரோவன் அடிங்சன். சார்லி சாப்ளினுக்கு பிறகு காமெடி ரசிகர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். இன்றுவரை இவரது நகைச்சுவை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். Mr.Bean தொடர் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

Mr bean

சில காலமாக அவ்வளவாக சினிமாவில் பார்க்க முடியாத இவர் சமீபத்தில் இறந்துவிட்டதாக உலகம் முழுவதும் வதந்திங்கள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை. இந்நிலையில் முன்பெல்லாம் பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருந்த Mr Bean தற்போது உடல் எடை கூடி மிகவும் குண்டாக மாறியுள்ளார். தனது ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் போது வெளியான வீடியோ ஓன்று வைரலாகிவருகிறது.