திருமணத்தில் சகோதர்கள் செய்த காரியத்தால், கண்ணீர்விட்டு உதவி கேட்ட நாகினி சீரியல் நடிகை! தீயாய் பரவும் வீடியோ!!

திருமணத்தில் சகோதர்கள் செய்த காரியத்தால், கண்ணீர்விட்டு உதவி கேட்ட நாகினி சீரியல் நடிகை! தீயாய் பரவும் வீடியோ!!


mounirai-ask-help-at-wedding-day-video-viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர் நாகினி. இந்தத் தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் ஏராளமான ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மௌனி ராய் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்தார். அதனை தொடர்ந்து இருவருக்கும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி  27 ஆம் தேதி இவர்களது திருமணம் கோவாவில் கேரளா முறைப்படி நடைபெற்றது பின் பெங்காலி முறைப்படியும் நடைபெற்றுள்ளது. 

அப்பொழுது மௌனி ராயை ஒரு ஸ்டூலின் மீது அமர வைத்து அவரது சகோதரர்கள் தூக்கி வந்துள்ளனர். அவர் வெற்றிலையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொண்டுள்ளார். ஆனால் அப்போது மௌனிராய் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கண்ணீர் விட்டு உதவி கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.