அந்தநாள் முதல்., ஒருவேளை உணவுக்காக கேப்டன் விஜயகாந்தை தவிக்கவைத்த பணியாளர்கள்..! கேப்டனின் குழந்தை குணத்திற்க்கு இதுவும் ஒரு காரணம்..!!  

அந்தநாள் முதல்., ஒருவேளை உணவுக்காக கேப்டன் விஜயகாந்தை தவிக்கவைத்த பணியாளர்கள்..! கேப்டனின் குழந்தை குணத்திற்க்கு இதுவும் ஒரு காரணம்..!!  



meesai rajendhiran speech about captain vijayakanth

தேமுதிக பிரமுகரும், நடிகருமான மீசை இராஜேந்திரன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க கடனை அடைக்க தலைவர் என்ற முறையில் திறம்பட சிங்கப்பூரில் நிகழ்ச்சி நடத்தினார். சென்னையில் எங்கு சூட்டிங் நடந்தாலும், அவர் சூட்டிங் முடிந்ததும் நடிகர் சங்க அலுவலகத்திற்கு சென்றுவிடுவார். இன்றுள்ள நடிகர்கள் அவ்வாறு இருக்கிறார்களா? என்றால் அது சந்தேகமே.

கேப்டன் சாப்பாடு போடுவதில் சளைத்தது இல்லை. காரைக்குடியில் மரியாதை பட சூட்டிங்கின் போது, 130 பேருக்கு சாப்பாடு பரிமாறினார். அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பின்னர் விஜயகாந்த் சாப்பிட்டார். அப்போது கேப்டன் மற்றும் அவருடன் இருந்த 6 பேர் மட்டுமே பரிமாறினார்கள். சிக்கன், மட்டன், மீன் & பிற இறைச்சிகள் என அனைத்தையும் பரிமாறினார். 

பல நடிகர்களுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு வந்தால், அவருக்கு மட்டும் வரும். விஜயகாந்த் வீட்டில் இருந்து சாப்பாடு வந்தால் 15 பேருக்கு சேர்ந்தே வரும். கேப்டன் சாப்பாடு போட்டு அழகு பார்ப்பார். 1978 ல் கேப்டன் சினிமாவுக்கு வருகை தந்தார். மதுரையில் நடந்த ஆசை 60 நாள் விழாவுக்கு, ரஜினிகாந்த் மற்றும் சிவகுமாருக்கு விஜயகாந்த் பாதுகாவலராக இருந்தார். தயாரிப்பாளர் அந்த வேலையை விஜயகாந்துக்கு கொடுத்திருந்தார். 

actor vijaykanth

அதனை வெற்றிகரமாக செய்த விஜயகாந்தை, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி, நீ என்னைப்போலவே இருக்கிறாயே. நீயும் நடிக்க வா என்று தெரிவித்துள்ளார். அதன்பின்னரே அவர் நடிக்க வந்தார். முதலில் நடிக்க தொடங்கிய சமயத்தில் அவரை யாருக்கும் தெரியாது. சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது, சாப்பாடு கேட்டும் கேப்டனுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. 

இறுதியில் எஞ்சிய சாப்பாடுகளை கொடுத்த நிலையில், அதில் கைவைத்து சாப்பிடுவதற்குள் சூட்டிங்கிற்கு அழைக்கிறார்கள். பின்னர் உழவன் மகன் திரைப்படத்தில் அனைவர்க்கும் சமமான சாப்பாடு கொடுத்தார்கள். அப்போதுதான் சினிமா ஊழியர்களுக்கு சிக்கன், மட்டன் அறிமுகமாகிறது. நாயகன் படப்பிடிப்பின் போது ஊழியர்களுக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டது. இங்கு மட்டன், சிக்கன் பரிமாறப்பட்டது. சாப்பாடு என்ற விஷயத்தில் கேப்டன் தான். சினிமாவில் 400 க்கும் மேற்பட்டோரை உருவாக்கிய பெருமை கேப்டனையே சாரும்" என்று தெரிவித்தார்.