சிவகார்த்திகேயனுடன் இணைகிறாரா இந்த பிக்பாஸ் சர்ச்சைநாயகி!! அவரே போட்டுடைத்த தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!

சிவகார்த்திகேயனுடன் இணைகிறாரா இந்த பிக்பாஸ் சர்ச்சைநாயகி!! அவரே போட்டுடைத்த தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!


meera mithun going to act with sivakarthickeyan

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக கலந்துகொண்டவர் மீரா மிதுன்.இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு அங்கும் பல சர்ச்சைகளை கிளப்பினார்.மேலும் இயக்குனர் சேரன் மீதும் தவறான அவதூறு  ஒன்றை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

Meera mithun

அதனை தொடர்ந்து  பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மீரா மிதுன் உடனே தனது மாடலிங் வேலையை துவங்கிவிட்டார். மேலும் கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோகள் போன்றவற்றை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு இன்று காலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிக்பாஸ் மீரா மிதுன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் உங்கள் வாழ்த்துக்களுடன், நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன் என மீராமிதுனே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.