மே தினத்தன்று தல மற்றும் தளபதி ரசிகர்களை குஷி படுத்தும் சன்டிவி!! காத்திருக்கும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்!!

மே தினத்தன்று தல மற்றும் தளபதி ரசிகர்களை குஷி படுத்தும் சன்டிவி!! காத்திருக்கும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்!!



may-day-special-movie

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று சன் தொலைக்காட்சி. தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். குறிப்பாக சன் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சீரியல் மட்டும் இல்லாது புது புது படங்களை ஒளிபரப்புவதிலும் சன் தொலைக்காட்சிக்கு நிகர் சன் தொலைக்காட்சிதான். புதிதாக வெளியான படங்களை திரை அரங்கில் மட்டுமே பார்க்க முடியும் என்பதை மாற்றி படம் வெளியான சில மாதங்களிலேயே சன் டீவியில் ஒளிபரப்பி வருகிறது இந்நிறுவனம். சமீபத்தில், தமிழ் புத்தாண்டு அன்று சூப்பர் ஸ்டார் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற "பேட்ட" படத்தை ஒளிபரப்பி தமிழக மக்களை சன்டிவி முன் உட்காரவைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.


இந்த நிலையில் தொழிலாளர் தினமான மே 1 அன்று சன்டிவியில்,  சமீபத்தில் வெளியான, தல அஜித் நடித்து மக்களிடையே பயங்கரமாக பேசப்பட்ட விஸ்வாசம் படம் ஒளிபரப்பவுள்ளனர். மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அஜித் பிறந்தநாள் என்பதால் விஸ்வாசம் படம் சன் டிவியில்  6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

Thala ajith
மே தினத்தன்று விஜய் ரசிகர்களையும் குஷி படுத்தும் வகையில் மாலை 3.30 மணிக்கு விஜய் நடித்த தெறி திரைப்படமும் ஒளிபரப்பவுள்ளனர். இதனால் தல மற்றும் தளபதி ரசிகர்கள் தொழிலாளர்த்தினமான மே 1ஐ ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.