சினிமா வீடியோ பிக்பாஸ்

அன்னைக்கு ஏன் நான் அப்படி பேசினேன் தெரியுமா? சர்ச்சையை தொடர்ந்து மதுமிதா வெளியிட்ட புதிய வீடியோ!!

Summary:

mathumitha post new video

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், வனிதா, சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி வெளியேற்றப்பட்டவர் மதுமிதா. அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடுமை, மற்றும் சில போட்டியாளர்களின் உடை குறித்த சில மோசமான கருத்துக்களை கூறி இருந்தார்.

அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுமிதா அன்றைக்கு செய்தியாளர் சந்திப்பில் நான் பேசிய விசயங்கள் அனைத்தும் உண்மை.   பொதுவாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவது வழக்கம். எனக்கு நடந்த சில விஷயங்களால் என் மன அழுத்தம் மேலும் அதிகமானது. அதனால் அன்று சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.

நான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்தபிறகும் 20 நாட்கள் அதன் தாக்கம் எனக்கு இருந்தது. வழக்குகள், நலம் விசாரிப்புகள் என ஏகப்பட்ட விசயங்கள் வெளியில் நடந்தது. அந்த சூழ்நிலையில் முதன்முறையாக மக்களைச் சந்தித்து பேசப்போகிறேன் என்றதும், என்னை அறியாமல் எனக்குள் இருந்த விசயங்கள் எல்லாம் வெளியில் வந்து விட்டது. இப்போது நன்றாகவே குணமடைந்து வருகிறேன். மனதளவில் இன்னமும் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது விரைவில் அதுவும் சரியாகி விடும் என கூறியுள்ளார்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


 


Advertisement