மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன ஒத்த வார்த்தை! இந்திய அளவில் ட்ரெண்டாக்கும் தல தளபதி ரசிகர்கள்!



master-audio-launch-vijay-talking

நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்  பிப்ரவரி 15 அன்று  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது. இந்த விழாவில் நடிகர் விஜய் கோர்ட் ஷுட் அணிந்து வந்திருந்தார்  அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

master

அப்பொழுது விழாவில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் ஆர்.ஜே.விஜய் இருவரும் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினர். அப்பொழுது அவர்கள் கோர்ட் சூட்  அணிந்து வந்தது குறித்தும் கேள்வி எழுப்பினர். அப்பொழுது அவர் அனைத்து விழாவிற்கும் சுமாராக உடையணிந்து செல்வதாக கூறி காஸ்ட்டியூமர் பல்லவிதான் இந்தக் கோர்ட் கொடுத்தாங்க. நானும் நண்பர் அஜித் மாதிரி கோர்ட் போட்டுப் போவோம் என்று போட்டு வந்தேன். நன்றாக இருக்கிறதா?" என்று பதிலளித்துள்ளார்.

விஜய் இவ்வாறு கூறியதும் அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். மேலும்  இதனை விஜய்,அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி  வருகின்றனர்.