நடிகர் மன்சூர் அலிகானின் மகளுக்கு இப்படி ஒரு ஆசையா! ஆனால் திருமணம் செய்ய நினைக்கும் தந்தை!

நடிகர் மன்சூர் அலிகானின் மகளுக்கு இப்படி ஒரு ஆசையா! ஆனால் திருமணம் செய்ய நினைக்கும் தந்தை!


Mansoor

தமிழ்  சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவரது நடிப்பில் வெளியான எத்தனையோ தமிழ் படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கேப்டன் பிரபாகரன், அதிரடிப்படை போன்ற பல்வேறு வெற்றிப்படங்கள் இவரது நடிப்புக்கு உதாரணமாக கூறலாம்.

பல்வேறு படங்களில் நடித்துள்ள மன்சூரலிகான் தற்போது சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி பெற்றார் நடிகர் மன்சூர் அலிகான்.

Mansoor

இந்நிலையில் தற்போது அரசியலை விடுத்து மீண்டும் நடிப்பை தொடர்ந்துள்ளார். இயக்குனர்களான கௌதம் மேனன், தங்கர் பச்சான், சற்குணம் போன்றவர்களின் படங்களில் நடிக்கவுள்ளாராம். இதனால் மிகவும் பிசியாக இருக்கும் மன்சூர் போன் அழைப்பை கூட எடுப்பதில்லையாம். 

இந்நிலையில் மன்சூர் அலிகானின் மகளுக்கு படிக்கும் போதே திருமணம் செய்து வைத்து விடலாம் என தந்தையாக நினைத்த மன்சூரிடம் அவரது மகள் நீதிபதியாக ஆக வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையில் இருந்து வருவதாக கூறியுள்ளாராம்.