சினிமா

இவங்கதான் விஜய் டிவியின் இலியானா..! புகைப்படம் பார்த்து கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

Summary:

குக் வித் கோமாளி மணிமேகலையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி மணிமேகலையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில்  தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால், சிரிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை.

பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து,  இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில்  அவர்களை எதிர்த்து  இருவரும்  திருமணமும் செய்து கொண்டனர். தற்போது சிறந்த ஜோடியாகவும் வலம்வருகின்றனர்.

அதை தொடர்ந்து பிரபல  விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர். தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை தினமும் அவரது நடிப்பால் மகிழ்வித்து வருகிறார்.

தற்போது அவருக்கு தெரிந்த ஒரே போஸில் அழகிய சிரிப்புடன் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் விஜய் டிவியின் இலியானா இவர் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement