சினிமா

2 மணி நேரம் உல்லாசமாக இருக்க 2 லட்சம் தருகிறேன்.. பிரபல நடிகையிடம் சில்மிஷம் செய்த தயாரிப்பாளர்..

Summary:

உல்லாசமாக இருக்க 2 மணி நேரத்திற்கு 2 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் தன்னிடம் கூறியதாக பரபரப்பு புகாரை முவைத்துள்ளார் ஹிந்தி பட நடிகை மந்தனா கரீமி ராய்.

உல்லாசமாக இருக்க 2 மணி நேரத்திற்கு 2 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் தன்னிடம் கூறியதாக பரபரப்பு புகாரை முவைத்துள்ளார் ஹிந்தி பட நடிகை மந்தனா கரீமி ராய்.

சினிமா துறையில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் குறித்து பலரும் மீ டூ மூலம் பல்வேறு புகார்களை முன்வைத்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஹிந்தி திரையுலகில் நடந்துள்ளது.

மந்தனா கரீமி ராய் என்ற நடிகை முதலில் சினிமாவில் ஒருசில பாடல்களுக்கு நடனமாடிவந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் இவர் சமீபத்திய ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து கோலா கோலா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கோலா கோலா படத்தின் கடைசி படப்பிடிப்பு நாளன்று அந்த படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர தரிலால் தன்னிடம் தவறாக முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார் மந்தனா கரீமி ராய்.

கேரவனில் இருந்த தன்னிடம் வந்து, 2 மணி நேரம் ஒத்துழைத்தாள் கூடுதலாக 2 லட்சம் தருவதாக கூறி, தன்னிடம் அவர் தப்பாக நடந்துகொள்ள முயற்சித்ததாக மந்தனா கரீமி ராய் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.


Advertisement