அடேங்கப்பா.. அச்சு அசல் அப்படியே அஜித்தை உரிச்சு வச்சிருக்காரே! வீடியோவை கண்டு பிரமித்துபோன ரசிகர்கள்!!
அடேங்கப்பா.. அச்சு அசல் அப்படியே அஜித்தை உரிச்சு வச்சிருக்காரே! வீடியோவை கண்டு பிரமித்துபோன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். மேலும் இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தல அஜித் சம்பந்தப்பட்ட எந்த தகவல் வெளிவந்தாலும் அதனை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த நிலையில் அண்மையில் அஜித் பிறந்த நாளன்று வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் தல அஜித்தை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் அட அப்படியே அஜித்தை போலவே இருக்காரே என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.