சினிமா

உயிருக்கு போராடிய நிலையில், பிரபல இளம் இயக்குனர் மரணம்! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!

Summary:

பிரபல இளம் இயக்குனர் ஷாநவாஸ் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில். மரணம் அடைந்துள்ளார்.

2015-ம் ஆண்டு வெளியான கரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷாநவாஸ். அப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஷாநவாஸ் ஜெயசூர்யா, அதிதி ராவ் நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் என்ற படத்தை இயக்கினார். இப்படம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இயக்குனர் ஷாநவாஸ் பாலக்காடு அருகே அட்டப்பாடியில் தங்கி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் வெளிவந்தது.

இதனையடுத்து அவர் உயர் சிகிச்சைக்காக கொச்சி மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது பாதி வழியிலே மரணம் அடைந்துவிட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் மறைந்த இயக்குனர் ஷாநவாஸ்க்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 


Advertisement