பிரபல டிவி தொகுப்பாளினி, காமெடி நடிகை திடீர் மரணம்.! சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்!!

பிரபல டிவி தொகுப்பாளினி, காமெடி நடிகை திடீர் மரணம்.! சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்!!



Malaiyala comedy actress passed away

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான 42 வயது நிறைந்த சுபி சுரேஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலமானவர் சுபி சுரேஷ். இவர் துவக்கத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக அறிமுகமானார். ரசிகர்களை கவரும் வகையில் காமெடியாக இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். அதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 

மேலும் சுபி சுரேஷுக்கு மலையாள படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. கனக சிம்ஹாசனம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் சுபி சுரேஷ் கடந்த சில காலங்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Malaiyala actress

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மலையாள காமெடி நடிகை சுபி சுரேஷ் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலக பிரபலங்கள், மற்றும் ரசிகர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.