சினிமா

அட.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க இவங்க! இந்த மாதிரியெல்லாம் யாரும் பண்ணிருக்கமாட்டாங்க! ஆனா அம்புட்டும் வேற லெவல்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நந்தினி. இந்த தொடரின் மூலம் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதனை தொடர்ந்து நந்தினி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன் என்ற தொடரில் நடித்து வருகிறார். மைனா நந்தினி சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா நந்தினி சீரியல் நடிகரான யோகேஷ்வரனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.


இந்த நிலையில் மைனா நந்தினி தற்போது தனது கணவருடன் வித்தியாசமான உடை மற்றும் மேக்கப் போட்டு அசத்தலான, வெவ்வேறு விதமான போட்டோஷூட் நடத்தியுள்ளார். மேலும் முகம் சுருங்கி வயதானவர் போலவும் மேக்கப் போட்டு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


    


Advertisement