சினிமா

குழந்தை பிறந்த சில நாளிலேயே ஷூட்டிங்கிற்கு திரும்பிய மைனா நந்தினி.! அதுவும் எந்த சீரியலுக்காக பார்த்தீர்களா!

Summary:

Maina nandhini and her husband act in pandian store serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில்  பெருமளவில் பிரபலமானவர் மைனா நந்தினி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும்  கலந்துகொண்டுள்ளார்.

நந்தினி வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு நடிகரும், நடன இயக்குநருமான யோகேஷ்வரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் மைனா நந்தினி மீண்டும் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  பதிவிட்டிருந்தார். அதாவது நந்தினி தனது கணவர் யோகேஷ்வரனுடன் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்துள்ளார். அதில் யோகேஸ்வரன் கதிரின் நண்பராகவும் அவரது மனைவியாகவே நந்தினியும் நடித்துள்ளனர்.

 


Advertisement