சினிமா

நடிகர் மகேஷ்பாபுவின் மகனா இது! அடுத்த ஹீரோ ரெடியா? வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்!

Summary:

Mahesh babu children photo viral

தெலுங்கு சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு. இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் மொழி புரியவில்லை என்றாலும் மகேஷ்பாபு நடித்துள்ளார் என்பதற்காகவே அவரது படங்களை பார்ப்பவர்கள் ஏராளம்.

நடிகர் மகேஷ் பாபு முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இவர் இளவயதிலேயே தனது தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர்  பல படங்களில் நடித்துள்ளார்.

மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா ஷிரோத்கர். இவருக்கு கௌதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் 
நேற்று மகேஷ் பாபுவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது எடுத்த புகைப்படங்களை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் மகேஷ்பாபுவின் மகனைக் கண்டு அடுத்த ஹீரோ ரெடி என பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement