திடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ள நடிகர் மாதவன்! ஓ.. இதுதான் காரணமா? வைரலாகும் புகைப்படம்!

திடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ள நடிகர் மாதவன்! ஓ.. இதுதான் காரணமா? வைரலாகும் புகைப்படம்!


madhavan-meet-pm-about-rocketry-nampi-effect-movie

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்துள்ளார். மேலும் அவரே அதில் விஞ்ஞானியாகவும் நடித்துள்ளார். நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில்  முதன்மையானவராக செயல்பட்டவர். 1994 ஆம் ஆண்டு இவர் ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டி மத்திய புலனாய்வுத்துறை இவரை கைது செய்தது.

இதனால் அவர் வேலையை இழந்து சிறை தண்டனை அனுபவித்தார். பின்னர் அவரை சில ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இவரது வாழ்க்கையே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என 5 மொழிகளிலும் படமாக உருவாகியுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் மாதவன் நம்பி நாராயணன் அவர்களுடன் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதுகுறித்த தகவலை இணையத்தில் பகிர்ந்த அவர் அந்த பதிவில், சில வாரங்களுக்கு முன்பு நானும், நாராயணன் நம்பி அவர்களும் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தோம். நாங்கள் வரவிருக்கும் ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தைப் பற்றி பேசினோம். மேலும் படத்தின் சில காட்சிகளை அவருக்கு போட்டு காட்டினோம். அதனை கண்ட அவர் நாராயணன் நம்பி அவர்களுக்கு நடந்த தவறு குறித்து வருத்தம் தெரிவித்தார் என தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்த போது எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.