பர்ஸ்ட் லுக் என்ற பெயரில் வெளிய பழைய லுக்; என்ன கொடும சார் இது..!

பர்ஸ்ட் லுக் என்ற பெயரில் வெளிய பழைய லுக்; என்ன கொடும சார் இது..!


maari-2-first-look

கடந்த 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உட்பட பலரும் நடித்து வெளியான படம் 'மாரி'. இந்தப் படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை என்றாலும், இப்படத்தில் வரும் வசனங்கள் இன்றும் பலரால் பேசப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே மீண்டும் மாரி இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். `மாரி -2' படத்தில் முக்கிய மாற்றமாக காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இவரைத்தவிர வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். 

maari 2 first look

இதனைத்தொடர்ந்து மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார்.

இதில் முதல் பாகத்தில் வரும் அதே தோற்றத்தில் முறுக்கு மீசை, கலர் சட்டை, காந்தி கண்ணாடி, செயின், பட்டாசு என எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளார் தனுஷ். மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.