உடல் எடை கூடி, புடவையில் நடிகை லாஸ்லியா எப்படியிருக்கார் பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

உடல் எடை கூடி, புடவையில் நடிகை லாஸ்லியா எப்படியிருக்கார் பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!


losliya latest photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களை சந்தித்தார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபின் இருவரும் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  லாஸ்லியாவிற்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் மற்றும் பிக்பாஸ்  தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது புடவை கட்டிக்கொண்டு பெருமளவில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் லாஸ்லியாவா இது! உடல் எடை கூடி இப்படி இருக்காரே என ஷாக்காகியுள்ளனர்.