ப்பா.. செம்ம டான்ஸ்! குட்டை உடையில் லாஸ்லியா போட்ட குத்தாட்டத்தை பார்த்தீங்களா! ரசிகர்களை ஆட்டிவைத்த வீடியோ!!

ப்பா.. செம்ம டான்ஸ்! குட்டை உடையில் லாஸ்லியா போட்ட குத்தாட்டத்தை பார்த்தீங்களா! ரசிகர்களை ஆட்டிவைத்த வீடியோ!!


Losliya dance video viral

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ்   3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் கலகலவென, பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்த அவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. பின்னர் அவர் காதல் சர்ச்சையில் சிக்கினார். 

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் கவின், லாஸ்லியா இருவரும் கண்டுகொள்ளவில்லை. லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் வர துவங்கியது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷ் உடன் இணைந்து ப்ரண்ட்ஷிப் மற்றும் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்ஸியா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள், நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். அந்த வகையில் அவர் தற்போது கிளாமரான குட்டையான உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். மேலும் அதில் அவர் நாங்கள் நடனமாட நாங்கள் யாருடைய அனுமதியுடன் தேவையில்லை என கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.