ப்பா.. ஏன் இப்படி? லாஸ்லியா செய்த காரியத்தால் திட்டி தீர்த்த நெட்டிசன்! அதுக்கு அவரோட பதிலடியை பார்த்தீர்களா!!

ப்பா.. ஏன் இப்படி? லாஸ்லியா செய்த காரியத்தால் திட்டி தீர்த்த நெட்டிசன்! அதுக்கு அவரோட பதிலடியை பார்த்தீர்களா!!


losliya-answered-to-netisan-who-scold-to-post-images

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே அவருக்கு பெரும் ஆர்மியே உருவானது. அதனைத் தொடர்ந்து லாஸ்லியா சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் FREEZE டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது அப்பா கண்டித்ததை தொடர்ந்து அவர் விளையாட்டில் ஆர்வம் காட்டி நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். இந்த நிலையில்  லாஸ்லியாவிற்கு தற்போது ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் மற்றும்  தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் லாஸ்லியா தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர் ஒருவர், அவன் அவன் கொரோனாவால் செத்துட்டு இருக்கான். உனக்கு போட்டோ ஷூட் கேக்குதா என்று திட்டி கமெண்டு செய்துள்ளார். அதற்கு லாஸ்லியா தயவுசெஞ்சு நீங்க இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதீங்க. அப்போதுதான் என்னுடைய போஸ்ட்டை நீங்க பாக்காமல் இருக்க முடியும் ப்ரதர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

losliya